ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நானே நிற்பேன்: டிடிவி தினகரன் சூசகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  நானே நிற்பேன்: டிடிவி தினகரன் சூசகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நான் உட்பட அனைத்து நிர்வாகிகளும் விரும்புகின்றனர் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. அதன்படி காங்கிரஸ் - அதிமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஈரோடு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் உட்பட அனைத்து நிர்வாகிகளும் விரும்புகின்றனர் கட்சி நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து போட்டியிடுவதா என்பது குறித்த அறிவிப்பு 27-ம் தேதி வெளியிடப்படும்" என்ற டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாகவும் அதற்கு தேவையான பணிகளைச் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கில் அமமுக போட்டியிட வேண்டும் என அனைவரும் விரும்கின்றனர். நான் கூட போட்டியிட வாய்ப்பு உள்ளது. தேர்தலில் நிற்பதற்குப் பயப்படவில்லை. சென்னை ஆர்கே. நகர் தொகுதியில் திமுகவை டெபாசிட் இழக்க செய்ததும் நாங்கள்தான். தேர்தல் தோல்வியைக் கண்டு தாங்கள் துவண்டு போகவில்லை. கஜினி முகமது தொடர்ந்து படை தொடுத்தது போல தொடர்ந்து தேர்தலைச் சந்திப்போம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in