
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளில் யாருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த 27-ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தபால் வாக்குகளில் யார் யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்பதை தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 398 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதில் 25 வாக்குகள் செல்லாதவதையாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ளவற்றில் 250 வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு கிடைத்துள்ளது. 104 வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு 10 தபால் வாக்குகளும், சுயேச்சைகளுக்கு 7 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஒரு வாக்கு கிடைத்துள்ளது. நோட்டாவுக்கு ஒரு வாக்கு பதிவாகி உள்ளது.