ஈரோடு கிழக்கில் தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

பத்மராஜன், காந்தியவாதி ரமேஷ்.
பத்மராஜன், காந்தியவாதி ரமேஷ்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் முதல் வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

இத்தேர்தலில் தேர்தல் மன்னனான பத்மராஜன் போட்டியிடுகிறார். இதுவரை 232முறை பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். தற்போது 233-வது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அவர், தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

இதே போல் காந்தியவாதி ரமேஷ், காந்தி வேடம் அணிந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும் டெபாசிட் தொகை பத்தாயிரம் ரூபாயை பத்து ரூபாய் காசுகளாக மாற்றி ரமேஷ் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பத்து ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து நோக்கில் தான் தான் டெபாசிட் தொகையை பத்து ரூபாய் காசுகளாக கட்டுவதாக காந்தியவாதி ரமேஷ் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in