
'நானும் உங்கள் குலத்தில் ஒருவன். அதனால் நமது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்' என எடப்பாடி பழனிசாமி கையொப்பத்துடன் கடிதம் வெளியாகி ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர் மத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் என்றாலே தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுப்பது வழக்கமான ஒன்று. அதிலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் போட்டிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்ச்சைக்கும் குறையில்லாது சென்றுக் கொண்டிருக்கிறது தேர்தல் களம்.
பகுத்தறிவு பேசும் ஆளும் கட்சியான திமுக குடுக்குடுப்பைக்காரரை வைத்து ஓட்டுக் கேட்பது, அமைச்சர்கள் டீ , போண்டா தயாரிப்பது என பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல அதிமுக சின்னமான இரட்டை இலையை கையில் பச்சைக் குத்திய பெண் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்ஜ் அணிந்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.