ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக போட்டி: விட்டுக் கொடுத்த தமாகா

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக போட்டி: விட்டுக் கொடுத்த தமாகா

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்றுக் கொண்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், தமாகா வேட்பாளர் யுவராஜ் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர், திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இவர் திடீரென மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், "இத்தொகுதியில் கடந்த 20 மாதங்களாக யுவராஜ் மக்கள் பணி ஆற்றி வருகிறார். எதிர்பாராத சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. இதனையடுத்து அதிமுக தரப்பில் எங்களைச் சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக போட்டியிட தமாகா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் அதிமுக அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற தமாகா உழைக்கும்" என்று ஜிகே வாசன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in