ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணிக்கு ஆதித்தமிழர் கட்சி ஆதரவு

ஆதித்தமிழர் கட்சி  தலைவர்  ஜக்கையன்
ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணிக்கு ஆதித்தமிழர் கட்சி ஆதரவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு முழு ஆதரவளிப்பதாக ஆதித்தமிழர் கட்சி தலைவர்  ஜக்கையன் கூறினார்.

மதுரை மாவட்டம், பேரையூரில் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜக்கையன் கூறுகையில், ``ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தமிழக முதல்வருக்கு, தமிழக அரசிற்கு நற்சான்று அளிக்கும் தீர்ப்பாக அமைய வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதிக்கலவரத்தை எப்படியாவது உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பாசிச சக்திகள், இந்துத்துவ சக்திகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.  அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே மீண்டும் வெல்ல வேண்டும்.

இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதித்தமிழர் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. கூட்டணி வெற்றிக்கு பிரச்சாரத்திலும் ஈடுபட உள்ளோம்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in