ஈரோடு கிழக்கில் களமிறங்க காய்நகர்த்தும் பாஜக!

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வான திருமகன் அண்மையில் காலமானார். இதனையடுத்து அந்தத் தொகுதிக்கு விரைவிலேயே இடைத் தேர்தல் வரவிருக்கிறது. மீண்டும் இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கே திமுக விட்டுக்கொடுக்கும். திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என செய்திகள் கசிகின்றன.

அதேசமயம், அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா இங்கு போட்டியிட்டது. இம்முறை அதிமுகவே இங்கு போட்டியிட வாய்ப்பு அதிகம். அப்படி போட்டியிட்டால் எப்படியாவது இரட்டை இலையை வெற்றிபெற வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார் ஈபிஎஸ். ஆனால், கட்சியில் தற்போது நிலவும் குழப்பமான சூழலில் அது சாத்தியமா என்ற கேள்வி அதிமுகவுக்குள்ளேயே இருக்கிறது. ஒருவேளை சின்னம் பெறுவதில் சிக்கல் இருந்தால் ஈப்பிஎஸ் இம்முறையும் தமாகாவுக்கே தந்திரமாக தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வரலாம்.

அதேசமயம் இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி, பாஜக தானே இங்கே களமிறங்க தயாராவதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அண்மையில் திண்டுக்கல்லில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை இதுகுறித்து கருத்துக் கேட்டிருக்கிறார். “நாம் போட்டியிட்டால் நிச்சயம் ஜெயிக்கமுடியும். திமுக அரசுக்கு எதிராக மக்கள் அத்தனை ஆத்திரத்தில் இருக்கிறார்கள்” என்று நிர்வாகிகள் அண்ணாமலைக்கு தெம்பான வார்த்தைகளைச் சொன்னார்களாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in