திடீரென ஈபிஎஸ் பக்கம் சாய்ந்த ஈரோடு வேட்பாளர்: ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை

செந்தில் முருகன்
செந்தில் முருகன் திடீரென ஈபிஎஸ் பக்கம் சாய்ந்த ஈரோடு வேட்பாளர்: ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நிறுத்தப்பட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியை தழுவினார். இந்தநிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த செந்தில் முருகன் திடீரென்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததால் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `அ.தி.மு.க. கொள்கை -குறிக்கோள்களுக்கும், கேட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் அமைப்பு செயலாளர் பி.செந்தில் முருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் நிர்வாகிகள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in