ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70 -வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரினா விளையாட்டு மைதானத்தில் தளபதி கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து விளையாட்டு மேம்பாட்டு அணியின் இலட்சினையையும் வெளியிட்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் முன்னிலை பெறுவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in