ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் ஈபிஎஸ்

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்யும் நேற்று வரை அதிமுக சார்பில் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று அக்கட்சியின் இடைக்காலப்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 1972-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த கே.எஸ்.தென்னரசு கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 1987-ல் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஜெயலலிதாவின் அணியில் ஈரோடு நகர செயலாளராக தென்னரசு பதவி வகித்துள்ளார். 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2009-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளராக தென்னரசு இன்று வரை பணியாற்றி வருகிறார். 2016-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தென்னரசு வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in