`எடப்பாடியை கைது செய்யுங்கள்’- ஓபிஎஸ் வீட்டிற்குச் சென்ற அமைச்சர் உதயநிதியை அதிரவைத்த ஆதரவாளர்கள்!

ஓபிஎஸ் உடன் முதலமைச்சர் ஸ்டாலின்
ஓபிஎஸ் உடன் முதலமைச்சர் ஸ்டாலின்`எடப்பாடியை கைது செய்யுங்கள்’- ஓபிஎஸ் வீட்டிற்குச் சென்ற அமைச்சர் உதயநிதியை அதிரவைத்த ஆதரவாளர்கள்!

``சுமத்ரா தீவின் மிகப்பெரிய சுனாமி ஈபிஎஸ். தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவரை கைது செய்ய வேண்டும்'' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் தாயார் அண்மையில் காலமானார். இதனையடுத்து சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோர் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இவர் எங்க தொகுதி எம்எல்ஏ என்றனர். ஒருசிலர் அவரை சூழ்ந்துக் கொண்டு, ஈபிஎஸ் சுமத்ரா தீவை தாக்கிய மிகப் பெரிய சுனாமியை போன்றவர். அதனால் நீங்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியான கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு தலையை ஆட்டிய அமைச்சர் உதயநிதி அமைதியாக நகர்ந்து சென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in