உதயநிதி காரில் ஏற முயன்ற ஈபிஎஸ்: சட்டப்பேரவைக்கு வெளியே நடந்தது என்ன?

உதயநிதி காரில் ஏற முயன்ற ஈபிஎஸ்: சட்டப்பேரவைக்கு வெளியே நடந்தது என்ன?

சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முயன்றார். பாதுகாவலர்கள் உடனே அலர்ட்டாகி தடுத்து அவரது காரில் ஏற்றி அனுப்பினர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். சென்னை அயோத்தியா மண்டபம் தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டு வந்த பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனால் சட்டப்பேரவையில் முதல்வர் ஆவேசத்துடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவர் சிரித்துக் கொண்டே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பெண் நிருபர் ஒருவர் மைக்கை நீட்டி பேட்டி எடுக்க முயன்றார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி பேட்டிக் கொடுக்காமல் அருகில் இருந்த காரில் ஏற முயன்றார். உடனே அலர்ட்டான பாதுகாவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி, ஏதோ தகவல் சொல்ல, விழித்துக் கொண்டு முன்னாடி இருந்த காரில் எடப்பாடி ஏற்றினார். எடப்பாடி பழனிசாமி முதலில் ஏற முயன்றது முதல்வர் ஸ்டாலினின் மகனும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கார். இதனால்தான் காவலர்கள், எடப்பாடி பழனிசாமியை தடுத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in