அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணியினர் சந்திப்பு: ஆதரவு அளிக்குமா பாஜக?

அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணியினர் சந்திப்பு: ஆதரவு அளிக்குமா பாஜக?

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. மகன் திருமகன் மறைந்த நிலையில் இளைய மகனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தனது கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகின்றனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சிப்பாரதம் பூவை மூர்த்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்ட ஈபிஎஸ் அணியினர், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து வருகின்றனர். சென்னை கமலாலயத்தில் நடந்து வரும் இந்த சந்திப்பின்போது அதிமுக மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் பேசி வருகின்றனர். அப்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி அண்ணாமலையுடன் அவர்கள் பேசி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரண்டு தரப்பினரும் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in