
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்த்கின் போது, ’’சரியான ஆம்பளையாக இருந்தால், மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால், வேட்டிக் கட்டிய ஆம்பளையாக இருந்தால்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உதிர்த்த வார்த்தைகள்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கன்மொழி உட்பட பலரும் தேர்தல் களத்தில் எதிர்வினையாற்றி வரும் நிலையில், ஆணின் அடையாளம் எது என சமூக வலைதளத்தில் தற்போது ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. எதிர்ப்பு, ஆதரவு என பஞ்சாயத்து களமாக காட்சி அளிக்கிறது ட்விட்டர். இதுத் தொடர்பாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஈபிஎஸ் பேச்சை மேற்கோள் காட்டி மூடர்கூடம் இயக்குநர் நவீன் ட்விட்டரில், ‘’ ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த ஸ்டிரியோ (stereotype) வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவுபடுத்தும் செயல் ‘’ என அவர் பற்ற வைக்க,
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, ‘’ இந்திரா காந்தி பற்றி கருணாநிதி என்ன சொன்னார்? எங்கள் கட்சிக்கு ஒரு பெண் தலைமை தாங்கினார். திமுகவில் பெண்கள் முதலமைச்சரின் காரில் தொங்குகிறார்கள் அல்லது ராஜா போன்ற மூத்தவர்களால் விபச்சாரிகள் என்று அவமதிக்கப்படுகிறார்கள். எனவே உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள் ‘’ என இயக்குநி=ர் நவீனுக்கு பதிலளித்துள்ளார்.