சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால்..!- ஈரோடு பிரச்சாரத்தில் திமுகவை வசைபாடிய எடப்பாடி பழனிசாமி

ஈரோடு பிரச்சாரத்தில்  எடப்பாடி பழனிசாமி
ஈரோடு பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால்..!- ஈரோடு பிரச்சாரத்தில் திமுகவை வசைபாடிய எடப்பாடி பழனிசாமி

ஈரோடு பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வீரப்பபாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "மக்களை ஏமாற்றுவதற்காக வீதி வீதியாக வந்து அமைச்சர்கள் பரோட்டா போடுகிறார்கள், வடை சுடுகிறார்கள். இதற்காகவா உங்களை அமைச்சராக்கினார்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்காக உங்களை அமைச்சராக்கி இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டு பரோட்டா போடவும், டீ போடவும் செய்கிறார்கள்.

ஈரோடு தொகுதி மக்களுக்கு நன்மை செய்வதற்காக உங்களை அமைச்சராக்கினார்கள். வீதி வீதியாக சென்று மக்களின் குறைகளை கேட்டீர்களா? கேட்கவில்லையே. இப்போது மட்டும் மக்கள் உங்கள் கண்ணுக்கு தெரியுது. இப்போது ஆட்சிக்கு ஆபத்து வரும் நிலை வந்துவிட்டது. அதனால் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு அமைச்சராவது ஏதாவது ஒரு திட்டங்களையாவது கொண்டு வந்து இருக்கிறீர்களா? இன்றைக்கு 25 அமைச்சர்கள் வந்து உள்ளீர்கள். ஒவ்வொரு அமைச்சரும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் கூட ஈரோடு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும். எதுவுமே இல்லை.

ஈரோடு பிரச்சாரத்தில்  எடப்பாடி பழனிசாமி
ஈரோடு பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி

கிராமத்தில் தான் ஆடு, மாடுகளை அடைத்து வைப்பார்கள். இப்போது வாக்காளர் பெருமக்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்து ஒரு கொட்டையை போட்டு அமர வைத்திருக்கிறார்கள். வரும்போது பார்த்தேன். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்திருக்கிறார்கள். நீங்கள் சரியான ஆம்பளையாக இருந்தால், மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா, சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே நேரே வந்து வாக்காளரை சந்தியுங்கள். திராணி இல்லை, தொம்பு இல்லை, எதிர்க்க சக்தி இல்லை.

கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு ஏழை மக்களை ஆங்காங்கே அழைத்து வந்து 120 இடங்களில் கொட்டாய் அமைத்து அமர வைத்து இருக்கிறீர்கள். நான் பிரச்சாரத்துக்கு வந்ததால் பொதுமக்களுக்கு 2000 ரூபாய் கிடைத்திருக்கிறது. திமுக அமைச்சர்கள் கொள்ளையடித்த பணம் ஏழை மக்களுக்கு போனது ரொம்ப சந்தோஷம். எப்படியோ மக்களுக்கு பணம் போய் சேரனும். ரெண்டு வேலை பிரியாணி போடுகிறார்கள். நல்லா சாப்பிட்டுவிட்டு ஓட்டை மட்டும் வரும் 27-ம் தேதி தென்னரசுக்கு போட்டு விடுங்கள். இரட்டை இலைக்கு போட்டு விடுங்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in