வருகிறார் ஈபிஎஸ்... வரவேற்பு பலமா இருக்கணும்!

அதிமுகவினருடன் ஆலோசனை நடத்தும் தங்கமணி...
அதிமுகவினருடன் ஆலோசனை நடத்தும் தங்கமணி...

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு முதல்முறையாக நாளை (ஆகஸ்ட் 28) திருச்சி வருகிறார் ஈபிஎஸ். அதற்காக ஒன்றிய, கிளைக் கழக செயலாளர்களையெல்லாம் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துக் கொண்டிருகிறார்கள் அப்பகுதி மாவட்ட செயலாளர்கள். ஈபிஎஸ்சை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். இதற்காக திருச்சியில் முகாமிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அனைத்து மாவட்ட செயலாளர்களையும் சந்தித்தும் தொடர்பு கொண்டும் இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவேண்டும். கூட்டமும் கொஞ்சமும் குறைந்துவிடக்கூடாது என்று கறாராக உத்தரவிட்டிருக்கிறார்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலம் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் வைத்திலிங்கத்தின் கட்டுப்பாட்டில் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்கள் இருப்பதால் இங்கு அவருக்குத்தான் பலம் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. இதையெல்லாம் பொய்யாக்கிக்காட்ட வேண்டும் என்பதற் காகவே இத்தனை மெனக்கிடுகிறதாம் ஈபிஎஸ் டீம். தனது திருச்சி வருகையின் போது மங்கலகரமாக முன்னாள் அமைச்சர் சிவபதியின் மகளின் திருமணத்தையும் நடத்திவைக்க இருக்கிறார் ஈபிஎஸ்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in