பொன்விழா நிறைவில் பொதுச்செயலாளர்?

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

அக்டோபர் 17-ம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள். இதையொட்டி பிரம்மாண்ட விழாவை நடத்தத் திட்டமிட்டு வருகிறார் ஈபிஎஸ். தற்போது அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக இருக்கும் ஈபிஎஸ், அதை பக்காவாக்கிக்கொள்ள பல வியூகங்களை வகுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எந்த நேரத்திலும் கூட்டும் முடிவில் இருக்கிறாராம். மா.செ கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதுடன் திமுக அரசு தொடுக்கும் வழக்குகளை சமாளிக்க வழக்கறிஞர் குழு ஒன்றை அமைக்கவும் திட்டம் வைத்திருக் கிறாராம். சசிகலா- ஓபிஎஸ் சந்திப்பு நடைபெறலாம் என்று செய்திகள் வரும் நிலையில் அதைச் சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்களுக்கும் தயாராகவே இருக்கிறதாம் ஈபிஎஸ் டீம். பொன்விழா ஆண்டு நிறைவை கொண்டாடும் சமயத்தில் ஈபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது அதிமுக வட்டாராம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in