ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுத்து வரும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

ஈபிஎஸ் படத்தை காலணியை கொண்டு தாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஈபிஎஸ் படத்தை காலணியை கொண்டு தாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

மதுரையில் ஓபிஎஸ் பிரச்சார வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் படத்தை காலணியால் தாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பின்னர் அதன் மேலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டினர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவன் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலமாக நேற்று மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ்-க்கு "அதிமுகவின் ஒற்றைத் தலைமையே, பொதுச்செயலாளரே" என்ற முழக்கத்தோடு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர். அப்போது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், சில தொண்டர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

இதனையடுத்து, தனது பிரச்சார வாகனத்தில் ஓபிஎஸ் புறப்பட்டபோது, அவ்வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த ஈபிஎஸ் படத்தை பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தங்களது காலணியால் ஈபிஎஸ் படத்தை தாக்கியதோடு ஈபிஎஸ்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்பு பிரச்சார வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் புகைப்படத்தை மறைத்தவாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்பட ஸ்டிக்கரை ஒட்டி உள்ளனர்.

அதிமுக மாவட்ட அலுவலகங்களில் ஓபிஎஸ் படத்தை அகற்றி வரும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in