ஆளுநர் ரவியைச் சந்திக்க காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி!

ஆளுநர் ரவியைச் சந்திக்க காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் திமுக அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கோவை கார் வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்கள் தமிழகத்தில் வேரூன்றி இருப்பதாகத் தமிழக அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்திக்க அவர் நேரம் கேட்டிருந்தார். அவருக்கு நாளை மதியம் 12.45 மணி அளவில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் தெரிவிக்க இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in