முன்னாள் அமைச்சர்கள் புடை சூழ ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் மலரஞ்சலி!

முன்னாள் அமைச்சர்கள் புடை சூழ ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் மலரஞ்சலி!

அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

அதிமுகவில் நடந்து வரும் அதிகாரப் போட்டியால் கட்சி ஓபிஎஸ், ஈபிஎஸ் என பிரிந்திருக்கிறது. இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு உட்படு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கட்ற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தளவாய் சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in