
அதிமுகவின் 52ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 52வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 52வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு கட்சியினர் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டின் போது உயிரிழந்த 8 குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக தலைமை அலுவலகத்தில் நுழைவு வாயில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தேர்தல் பணி குறித்தும் பேச உள்ளார். சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூத் வாரியாக கமிட்டி அமைத்தல் மற்றும் கட்சியின் கிளை அமைப்புகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!
சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!
அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?
என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!