விடாது துரத்தும் பாஜக... இபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி, பூத் கமிட்டிகள் அமைப்பது, இளைஞர், இளம்பெண்கள் பாசறைகளை ஏற்படுத்துதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக vs பாஜக
அதிமுக vs பாஜக

ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி முறிவு குறித்து பொறுப்பாளர்களின் எண்ண ஓட்டங்களை இபிஎஸ் அறிந்து கொள்ள விரும்புவதாகக் கூறப்படுகிறது. மேலும் பாஜக டெல்லி தலைமை இன்னும் இபிஎஸ்சுடன் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in