என் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனுதாக்கல்

என் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்:  உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனுதாக்கல்

அதிமுக தலைமை அலுவலகம் விவகார வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் ஒற்றைத்தலைமை என்ற நிலைக்கு அக்கட்சியைத் தள்ளியுள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக தலைமையகம் முன்பு நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து போலீஸார், லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதன் சாவி வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் அதிமுக தலைமைக்கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக கேவியட் மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in