ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பா?- முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி

ஈபிஎஸ் - ஓபிஎஸ்
ஈபிஎஸ் - ஓபிஎஸ்ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பா..? - முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி

’’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலையை வெற்றிப் பெறச் செய்வதே எங்களது நோக்கம். அதற்காக பாடுபடுவோம். தேர்தல் பிரச்சாரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பு நடக்கலாம்’’ என ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனுக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இதனையடுத்து சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செந்தில் முருகன் சந்திந்து வாழ்த்துப் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், ‘’ ஓபிஎஸ் உட்பட நாங்கள் அனைவரும் இரட்டை இலை வெற்றிக்காக பாடுபடுவோம். ஓபிஎஸ்ஸுக்கு நன்றி தெரிவித்த செங்கோட்டையனுக்கு திறந்த நல்ல மனம் இருக்கிறது'' என்றார்.

ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பிற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சாப்பிடுகிற இடத்தில் கூட சந்திக்கலாம். ஆளுங்கட்சியை எதிர்த்து தேர்தலை சந்திக்கிறோம். அதனால் எல்லோரும் சேர்ந்து போக வேண்டும் என்றால் போதிய கால அவகாசம் இல்லை. அவரவர் அவரது பாணியில் இரட்டை இலை வெற்றிக்கு பாடுபடுவார்கள்.

ஓபிஎஸ்ஸுடன் - செந்தில் முருகன்
ஓபிஎஸ்ஸுடன் - செந்தில் முருகன் ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பா..? - முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி

தமிழ்மகன் உசேன் ஏ.பி படிவங்களில் கையெழுத்து இடுவதால் எங்களுக்கு எந்தவிதமான பின்னடைவு இல்லை. உச்சநீதிமன்றம் இந்த இடைத்தேர்தலுக்கான நிவாரணமாகத்தான் இதனை தெரிவித்துள்ளது. ஆனால் பொதுக்குழு வழக்கு அப்படியேத்தான் உள்ளது. இரட்டை இலைக்கு கையெழுத்துப் போட வேண்டும் என ஈபிஎஸ் பறந்தார். ஆனால் அந்த அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துவிட்டது. 27-ம் தேதிக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்’’ என அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in