எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இன்பநிதியை ஏற்கவும் திமுக மூத்த தலைவர்கள் தயாராகிவிட்டார்கள்... எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அப்புறம் உதயநிதியை திமுக மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். அடுத்ததாக இன்பநிதியை ஏற்கவும் திமுக மூத்த தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ இந்தியாவிலேயே ஜனநாயகப்படி அரசியல் செய்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். ஆனால் திமுகவில் அப்படியில்லை. ஸ்டாலினுக்கு அப்புறம் உதயநிதியை திமுக மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். அடுத்ததாக இன்பநிதியை ஏற்கவும் திமுக மூத்த தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள். என்னங்க இது அடிமைத்தனம். உழைப்பாளிகள் நிறைந்த கட்சி அதிமுக. அதிமுக பத்து ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தது என்று வாய் கூசாமல் பேசுகிறார்.

தீய சக்தி திமுக எனக் கூறி எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார் அன்றிலிருந்து இன்று வரை திமுக தீய சக்தியாக உள்ளது. பாஜகவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒன்றும் கள்ளத்தொடர்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பழக்க தோஷம் உங்களுக்கு இருப்பதால் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சதுரங்க வேட்டை படம் பார்த்தேன். அதிலே நடிகர் சொல்வார், ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று சொன்னால், முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று. அப்படி தான் 2021 சட்டசபை தேர்தலில் நிறைவேற்றவே முடியாத 520 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. 520 அறிவிப்புகளில் இன்றைக்கு எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது, 10 சதவீதம் கூட இல்லை.

மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் என்று சொல்லிவிட்டு இப்போ பாத்தீங்க என்றால் ஒருசிலருக்கு மட்டும் கொடுத்து இருக்கிறார். அதிமுக அழுத்தம் கொடுத்ததாலேயே இந்த ஆயிரம் ரூபாயும் மக்களுக்கு கிடைத்துள்ளது. அதையும் உடனே கொடுக்கவில்லை. 27 மாதம் கழித்து கொடுத்திருக்கிறார்கள். இதனால் 27 ஆயிரம் போச்சு. அதிமுக என்றால் ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கொடுத்து இருப்போம். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இல்லையென்றால் அதிமுக கூட்டணியை பற்றி திமுக ஏன் கவலைப்பட வேண்டும்.

இந்த ஆட்சி முடிவதற்குள் 2 லட்சம் கோடி கடன் வாங்கிவிடுவார். 6 லட்சம் கோடி கடன் வாங்கி மக்கள் தலையில் கட்டிவிட்டு போய்விடுவார். பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும். வட்டியும் கொடுக்க வேண்டும். இந்த நிலைமைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.

விவசாயத்தை பற்றி தெரியாமல் நாடகம் ஆடும் முதலமைச்சர் தான் ஸ்டாலின். மனிதர்களுக்கு மட்டுமின்றி வாய்பேச முடியாத கால்நடைகளின் நலனுக்காக கால்நடைகளுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இன்றைக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் தலைவாசல் கூட்டுரோட்டில் ரூ. 1000 கோடியில் அமைத்து கொடுத்தோம். இதை கூட திறந்து வைக்க வைக்க கூட வக்கில்லாமல் இருப்பது தான் திமுக அரசு.

அதிமுக பொதுக்கூட்டம்
அதிமுக பொதுக்கூட்டம்

அயலக அணி என்று திமுகவினர் வைத்திருக்கிறார்கள். எந்த கட்சியிலாவது அயலக அணி என்று இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி ஒரு அணியை உருவாக்கி அந்த அணியில் இருக்கின்ற பொறுப்பாளார் வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தியிருக்கிறார். பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள்.. ஜாபர் சாதிக் என்பவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் தமிழ்நாட்டை நோக்கி அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் வலிமையான கட்சியாக அதிமுகவாக உள்ளது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் இயங்குவது கேள்விக்குறியாக மாறி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நாம் தேர்தலை சந்திக்கிறோம். தொழில்கள் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in