டி.டி.வி-க்கு அமலாக்கத்துறை சம்மன்: மீண்டும் வேகமெடுக்கும் இரட்டை இலை வழக்கு!

டி.டி.வி-க்கு அமலாக்கத்துறை சம்மன்: மீண்டும் வேகமெடுக்கும் இரட்டை இலை வழக்கு!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி வரை பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனிடையே 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறிய விவகாரத்தில் நடந்த பணமோசடி தொடர்பான வழக்கிலும், சுகேஷ் சந்திரசேகர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை தினகரன் அணிக்கு பெற்றுத்தர சுகேஷ் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும், தினகரன் ரூ.2 கோடி கொடுத்ததாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

இரட்டை இலை வழக்கில், சிபிஐயால் கைது செய்யப்பட்ட சுகேஷ், ஜாமீனில் வெளிவந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது அமமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.