மேலும் ஒரு ஆம் ஆத்மி தலைவரை கட்டம் கட்டும் அமலாக்கத் துறை!

அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை

பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்க கோரி அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான்
ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான்

டெல்லி வக்ஃபு வாரிய நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதில், டெல்லி ஓக்லா தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-வான அமானதுல்லா கான் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் உள்பட நால்வர் மீது, அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்எல்ஏ அமானதுல்லா கானுக்கு, அமலாக்கத் துறை கட்ந்த ஜனவரி 23, 31, பிப்ரவரி 9, 19, 26 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் சம்மன்கள் அனுப்பியது. ஆனால் அவர் இந்த சம்மன்களுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து டெல்லி நீதிமன்றத்தை அமலாக்கத் துறை அணுகியது. அதன்பேரில் வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமானதுல்லா கானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றம்
டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றம்

இச்சூழலில் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்க கோரி அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த ரூஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ராகேஷ் சயால், அமலாக்கத் துறையின் கோரிக்கை தொடர்பாக சில கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளார். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் சிறிது கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை வரும் 18ம் அன்று விசாரிக்க பட்டியலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கெனவே, கலால் கொள்கை முறைகேடு, டெல்லி ஜல் வாரிய முறைகேடு போன்ற வழக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. முதல்வர் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட அக்கட்சி முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி வக்ஃபு வாரிய நியமன முறைகேடு வழக்கும் ஆம் ஆத்மிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in