
``ஜனநாயக நாட்டின் அரசு இயந்திரங்கள் மூலம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் மத்திய அரசு படிய வைக்க நினைக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளை திமுக அமைச்சர்கள் சட்டப்படி சந்திப்பார்கள்'' என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தமிழ்நாடு நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’பாஜக ஆளாத மாநிலங்களில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசு தற்போது தமிழகத்திலும் அதை செயல்படுத்துகிறது.
ஜனநாயக நாட்டின் அரசு இயந்திரங்களான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை படிய வைக்க நினைக்கிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மட்டும்தான் இந்த மாதிரியான ரைடு நடவடிக்கைகள் நடைபெறுகிறது. திமுக அமைச்சர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு அஞ்சாமல் சட்டப்படி சந்திப்பார்கள்’’ என்றார்.