செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது: 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது: 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அத்துடன் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என்று 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது: 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கைது நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு நீதிபதி நிஷா பானு ஏற்றார். ஆனால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என்றும் நீதிபதி பரத சக்கரவத்தி கூறினார். அத்துடன் மருத்துவமனையில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவல் காலமாக கருதப்படாது. மருத்துவ ரீதியாக தகுதி பெற்றபின்உரிய நீதிமன்ற அனுமதி பெற்று செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கலாம் என்றும் அவரது தீர்ப்பில் கூறினார். மாறுபட்ட இந்த தீர்ப்புகளால் இவ்வழக்கில் 3-வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

கடந்த 11-ம் தேதி முதல் 3-வது நீதிபதி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. மூன்றாவது நாளாக இன்று வாதம் நடைபெற்றது.

அப்போது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறுகையில்," நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணை தொடரலாம். அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்டபின் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன்படுகிறேன். அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. கைது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in