மேற்கு வங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க அமைச்சர் ரதின் கோஷ் தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொல்கத்தா, 24 பர்கனாஸ் மாவட்டம் உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இந்த சோதனைக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே மேற்கு வங்க அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சில எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அபிஷேக் பானர்ஜியும் அமலாக்கத்துறையால் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்.
இதையும் வாசிக்கலாமே...
மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!
HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!
அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!
அதிகாலையில் அதிர்ச்சி... போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!