பரபரப்பு... ஆளும் கட்சி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

பஞ்சாப் மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மியின் எம்எல்ஏ குல்வந்த் சிங்கின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

போதைப்பொருள் தொடர்பான பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாக இன்று காலை முதல் எம்எல்ஏ குல்வந்த் சிங்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்
ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்

குறிப்பாக மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் துணையுடன் கூட்டாட்சி புலனாய்வு முகமையால் பாதுகாக்கப்படும் இடங்களாக மொஹாலி, அமிர்தசரஸ் மற்றும் லூதியானா ஆகியவை உள்ளன. இந்த நிலையில், மொஹாலி எஸ்ஏஎஸ் நகரில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ குல்வந்த் சிங்கிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in