முன்னாள் எம்.பியின் ரூ.315 கோடி சொத்துக்கள் முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி!

முன்னாள் எம்.பி ஈஷ்வர்லால் சங்கர் லால் ஜெயின் லால்வானி
முன்னாள் எம்.பி ஈஷ்வர்லால் சங்கர் லால் ஜெயின் லால்வானி

வங்கி பண மோசடி வழக்கில், தேசியவாத காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஈஷ்வர்லால் சங்கர் லால் ஜெயின் லால்வானியின், 315 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., ஈஷ்வர்லால் சங்கர்லால் ஜெயின் லால்வானி (77). இவர், மஹாராஷ்டிராவில் வசித்து வருகிறார். ராஜ்மல் லக்கிசந்த் ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் பங்குதாரராக இருந்துள்ளார். இந்த நிறுவனங்கள், பாரத ஸ்டேட் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, 352.49 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறையினர், மூன்று நகைக் கடை நிறுவனங்கள், அதன் இயக்குனர்கள், பங்குதாரர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரு மாதங்களுக்கு முன் சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

இதன் அடிப்படையில், முன்னாள் எம்.பி. ஈஷ்வர்லால் சங்கர்லாலுக்கு சொந்தமான மற்றும் அவரது பினாமி பெயரில் இருந்த தொழிற்சாலைகள், நகைக் கடைகள் உட்பட, 70 இடங்களில் உள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். இதன் மதிப்பு 315.60 கோடி ரூபாய். கடந்த ஆகஸ்டில் ஈஷ்வர்லால் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், தங்கம் மற்றும் வைர நகைகள் உட்பட, 25 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், அமலாக்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in