ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு... அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி  ஜாமீன் கோரி  தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் கோரி ஏற்கெனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த சூழ்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சை பெற்ற செந்தில்பாலாஜி,  ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் கோரிக்கை விடுத்தார்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில்பாலாஜி அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை எனவும், மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார் எனக்கூறினார். அத்துடன் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த அறிக்கையை அமலாக்கத்துறைக்கு அளிக்க அறிவுறுத்திய நீதிபதி, இதுகுறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படியும், மனுவுக்கு பதிலளிக்கும்படியும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in