விசாரணைக்கு ஆஜராகாத கேஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்கு... நீதிமன்றத்தில் 7-ம் தேதி விசாரணை!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கேஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கு வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

அமலாக்கத்துறை - அரவிந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத்துறை - அரவிந்த் கேஜ்ரிவால்

இந்நிலையில், 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கேஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 63 (4)-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேரிடம் தலா ரூ.25 கோடி பேரம் நடைபெற்றிருப்பதாகவும் கேஜ்ரிவால் கூறியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியது தொடர்பான ஆதாரங்களை அளிக்குமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அளித்தனர்

இந்தச் சூழலில், தன்னை பாஜகவில் இணையக் கட்டாயப்படுத்துவதாகக் கூறி இன்று மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் கேஜ்ரிவால்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in