இந்துக்களின் எதிரியா? - ட்விட்டரில் வெடித்த சர்ச்சைக்கு ஆ.ராசா பதில்!

இந்துக்களின் எதிரியா? - ட்விட்டரில் வெடித்த சர்ச்சைக்கு ஆ.ராசா பதில்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் வீடியோவை பகிர்ந்து காங்கிரஸைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் எழுப்பிய கேள்விக்கு, தற்போது ஆ.ராசா ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன் ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் திமுக எம்.பி ஆ.ராசா சூத்திரர்கள், பஞ்சமர்கள் குறித்து பேசியுள்ள வீடியோ கிளிப்பை பகிர்ந்துள்ளார். மேலும், “இந்துக்களை இழிவாகப் பேசும் மாற்று மதத்தை சேர்ந்த திமுகவின் ஆ.ராசா போன்றோரின், பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கே.எஸ்.அழகிரி, உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். மதத்தின் பெயரால் ராசாவை தமிழக முதல்வர் கைது செய்ய வேண்டுகிறேன்” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் இது தொடர்பான விவாதம் வெடித்தது.

இந்த சூழலில் இன்று ஆ.ராசா வெளியிட்டுள்ள ட்விட்டில், “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்!” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in