
பகைவர்கள் பலத்தோடு வருகிறார்கள் பதுங்கி இருந்து வருகிறார்கள். நேரடியாகவும் வருகிறார்கள். பார்த்துக் கொள்வோம் என்று படுத்துக்கொண்டு தூங்குவதற்கு மாறாக களத்தில் அனைவரும் தயாராக இருக்க வேண்டிய காலக்கட்டம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பெற்றுக் கொண்டார்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் கருஞ்சட்டை பதிப்பகம் சார்பில் கே.ஏ.மதியழகன் எழுதிய 'வாழ்வும் சிந்தனையும்' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பெற்று கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், இது தமிழர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் விழா, நன்றி தெரிவிக்கும் விழா. உடல் நலத்தின் காரணமாக வைகோ சென்ற போது அரங்கத்தில் இருந்த பாதிப்பேர் அவருடன் சென்று விட்டனர் அப்போது அரங்கம் காலியாக தெரிந்தது, பின்பு அவருடன் சென்ற பெரும்பான்மையானோர் திரும்பி வந்து விட்டனர். புதியவர்கள் வருகையால் அரங்கம் நிரம்பி வழிகிறது இது இயற்கை.
பகைவர்கள் பலத்தோடு வருகிறார்கள் பதுங்கி இருந்து வருகிறார்கள். நேரடியாகவும் வருகிறார்கள். பார்த்துக் கொள்வோம் என்று படுத்துக்கொண்டு தூங்குவதற்கு மாறாக களத்தில் அனைவரும் தயாராக இருக்க வேண்டிய காலக்கட்டம். இந்த இனத்தை மொழியை மண்ணைக் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நம் அத்தனை பேரிடம் உள்ளது என்று கூறினார்...
இந்த நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குனர் முத்துராமலிங்கம், டிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.