சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் திறந்தேன் என உருட்டவேண்டாம் - அண்ணாமலையைச் சீண்டும் செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

பாஜக தலைவர் ஒருவர் விமானம் புறப்பட்ட போது அவசரகால கதவை திறந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையானது. விமானம் புறப்பட்டபோது அவசரகால கதவு திறப்பட்டதால் பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்பட்டு பாதுகாப்பு சோதனை நடந்ததாக தகவல் வெளியாகின.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனாலும் அந்த விவகாரம் பூசி மெழுகப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விமான கட்டுப்பாட்டு இயக்குநரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,

’ 2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் எமெர்ஜென்ஸி கதவைத் திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று அதுபற்றி டிஜிசிஏ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி’ என பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in