இலங்கையில் இன்று முதல் மீண்டும் அவசரநிலை: இடைக்கால அதிபர் ரணில் திடீர் அறிவிப்பு

இலங்கையில் இன்று முதல் மீண்டும் அவசரநிலை:  இடைக்கால அதிபர் ரணில் திடீர் அறிவிப்பு

இலங்கையில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் வாழ்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகிக் கோரி நடத்திய போராட்டம் மக்கள் புரட்சியாக வெடித்தது.

இதனால் கோத்தபயராஜபக்ச சிங்கப்பூருக்குத் தப்பிச்சென்றார். இதன் பின் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக காலியாக உள்ள அதிபர் பதவிக்கு நாளை மறுநாள்( ஜூலை 20) தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலையொட்டி வன்முறை ஏற்படாமல் இருக்கவும், , சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும் இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிறப்பித்தார். இதன்மூலம் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in