அதிர்ச்சி... மின்சார கட்டணம் அதிரடி உயர்வு; முதல்வர் அறிவிப்பு

மின்சார கட்டணம்
மின்சார கட்டணம்

புதுச்சேரியில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விலை ஏற்றத்தை மத்திய, மாநில அரசுகள் மக்களின் மீது சுமத்தி வருகிறது. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு சுமையை புதுச்சேரி மக்களுக்கு அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. புதுச்சேரியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களிடையே கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியது. அப்போது மின்சார கொள்முதல் விலையை ஈடு செய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மின்சார கொள்முதலை ஈடுகட்டும் விதமாக மூன்று மாதங்களுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

அதன்படி புதுச்சேரி அரசு இன்று மின்சார கட்டணத்தை அதிரடியாக உயர்த்திருக்கிறது. வீடுகளில் 300 யூனிட்டுக்கு மேல் வரை உபயோகிப்பவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டு இருக்கிறது. வீடுகளில் 100 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக மின்கட்டணம் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 66 பைசாவும், 250 யூனிட்டுக்கு மேல் 77 பைசாவும் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 60 பைசாவும், உயர் அழுத்த வர்த்தக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 62 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய 3 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் புதுச்சேரி மின்துறை வாரியம் அறிவித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in