மாதம் தோறும் மின்கட்டணம் மாற்றியமைப்பா?: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மாதம் தோறும் மின்கட்டணம் மாற்றியமைப்பா?: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

புதிய மின்சார திருத்த சட்டத்தின் காரணமாக மாதம் ஒருமுறை மின்சாரம் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்ற செய்தி முற்றிலும் தவறானது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் இரண்டாம் நாள் நேர்காணல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதன் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்," வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். புதிய மின்சார திருத்த சட்டத்தின் காரணமாக மாதம் ஒருமுறை மின்கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளன. இது முற்றிலும் தவறானது. மத்திய அரசின் இந்த சட்டம் மசோதா வந்த போது மிகக்கடுமையாக திமுக நாடாளுமன்றத்தில் எதிர்த்தது. தற்போது இந்த மசோதா நிலைக்குழுவில் உள்ளது.

மேலும், "இந்த திருத்த சட்ட மசோதா, மக்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விளக்கம் இல்லை. மின்சாரத் துறையை தனியார் மயமாக்கும் திட்டமாக இந்த சட்டம் உள்ளது. பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்வது போல் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வழிவகுக்கிறது. எனவே, திமுக இதை ஒருபோதும் அனுமதிக்காது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்டாயம் திமுக கூட்டணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும். கூட்டணி கட்சியின் வெற்றிக்காக திமுக கடுமையாக உழைக்கும்" என்று தெரிவித்தார். 

அண்ணாமலை குறித்து கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, வாட்ச் விலை கேட்டதற்கு ஏப்ரல் மாதம் வரை கால தாமதம் ஆகும் போல அதை கட்ட, இது எனக்கு வெகுமதியாக கிடைத்தது, இவர் பரிசாக கொடுத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.

மேலும், பாஜகவில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், அந்த கட்சியின் நிலைமை எப்படி உள்ளது நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் என அவர் விமர்சனம் செய்தார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in