அடிச்சான் பாருய்யா கல்யாண பத்திரிக்கை... வாக்களிப்பதை ஊக்குவிக்க அடடே ஐடியா!

திருமண அழைப்பிதழ் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழ் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு அழைப்பிதழ்

மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள ஜனநாயக திருவிழா அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நாளை துவங்கி வருகிற ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இதன் ஒரு பகுதியாக நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவிற்கு அனைவரும் வருகை தர வேண்டும் என்பதை வலியுறுத்தி ’ஜனநாயக திருவிழா அழைப்பிதழ்’ என்ற பெயரில் திருமண அழைப்பிதழ் போல் உருவாக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ’ஜனநாயக கடமையை செய்வோம். இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்’ என்ற வாசகங்களுடன், நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அந்த அழைப்பிதழில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

மக்களவையில் வாதாடி நமக்கு நன்மைகள் செய்யக்கூடிய தன்னலமற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த அற்புத வாய்ப்பை தவறவிடாமல் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றிட அன்புடன் அழைப்பதாக அந்த அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. ’பொறுப்புள்ளவர்களின் அடையாளம் வாக்களிப்பது, வாக்களிப்போம் ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம். உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்’ எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in