`திமுக மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம்’ - உச்ச நீதிமன்றம் காட்டம்!

`திமுக மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம்’ - உச்ச நீதிமன்றம் காட்டம்!

திமுக மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமான கேள்விகளை திமுக வழக்கறிஞரிடம் முன்வைத்திருக்கிறார்.

தேர்தலில் போது இலவசங்களை அறிவிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் நடைபெற்று வருகிறது. இலவசத் திட்டங்கள் அறிவிப்பிற்குத் தடைவிதிக்கக் கூடாது என திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தங்களது வாதங்களையும் திமுகவினர் முன் வைத்து வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணையின் போது, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் இலவசங்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களா, அல்லது ஒட்டு மொத்தமாகவே இலவசங்கள் அறிவிப்பதை வரவேற்கிறீர்களா என திமுக வழக்கறிஞர் வில்சனுக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது, “கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கு மாடுகள் வழங்குவது, கிராமப் புற மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவது உள்ளிட்டவற்றையெல்லாம் நலத்திட்டங்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நீதிமன்றத்தால் இலவசத்தையும், நலத்திட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடிகிறது. உங்கள் கட்சிதான் இத்தகைய விஷயங்களையெல்லாம் புத்திசாலித்தனமாகக் கையாளுகிறது என நினைக்க வேண்டாம். நாங்களாக இந்த வரம்புக்குள் வரவேண்டாம் என நினைத்திருந்தோம். நாடாளுமன்றம் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம்” என்றார் தலைமை நீதிபதி.

தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இலவசங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையைச் சுட்டிக்காட்டி முன்வைத்த வாதங்கள் ஆட்சேபனைக்குரியது என சில வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தார்கள். இந்த புகாரின் அடிப்படையில் இப்படி காட்டமான கேள்விகளைத் தலைமை நீதிபதி முன் வைத்திருந்தார். வழக்கின் விசாரணை நாளையும் நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in