ஜம்மு காஷ்மீர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்... தேர்தல் ஆணையம் அதிரடி!

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 7ஆம் தேதிக்கு பதிலாக மே 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சித் தலைவர் அல்தாப் புகாரி, மக்கள் மாநாட்டுத் தலைவர் இம்ரான் அன்சாரி மற்றும் பலர், மோசமான வானிலை காரணமாக அந்த தொகுதிக்குத் தேர்தலை மாற்றக் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளை உள்ளடக்கிய சாலை நிலைமைகள், வானிலை மற்றும் அணுகல் குறித்த விரிவான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மே 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ‘பல்வேறு தளவாடங்கள், தகவல் தொடர்பு மற்றும் இணைப்புக்கான இயற்கைத் தடைகள் பிரச்சாரத்திற்கு இடையூறாக மாறிவிட்டன. இதனால் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நியாயமான வாய்ப்புகள் மற்றும் தேர்தல் செயல்முறை பாதிக்கப்படும்’ என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் மியான் அல்தாப் மற்றும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உட்பட 21 வேட்பாளர்கள் இந்த தொகுதியில் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிக்கு மே 7 ஆம் தேதி மூன்றாம் கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது ஆறாம் கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா (தேசிய மாநாடு) மற்றும் மெகபூபா முப்தி (பிடிபி) ஆகியோர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்று கடந்த வாரம் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினர். இதுகுறித்து பேசிய உமர் அப்துல்லா, "ஒத்திவைப்பு கோரிக்கை அனைத்து தரப்பினரிடமிருந்தும் இல்லை. இதில் விநோதமான விஷயம் என்னவென்றால், தேர்தலை ஒத்திவைக்க கடிதம் கொடுத்தவர்களில் சிலர் போட்டியிடாமல் இருப்பதுதான். தமிழகத்தில் உள்ள தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதினால் அவர்கள் கவனிப்பார்களா?'' என்று கேள்வி எழுப்பினார்

மெகபூபா முப்தி
மெகபூபா முப்தி

இதுபற்றி மெகபூபா முப்தி கூறுகையில், "என்னை பார்லிமென்டில் பார்க்க விரும்பாததால், அவர்கள் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க மோசடி செய்கிறார்கள். மக்கள் அனைவரும், மதம் மற்றும் கட்சி பேதங்களைக் கடந்து, எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in