தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரிக்க மறுக்கிறது: இரட்டை இல்லை சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் முறையீடு

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்கத் தேர்தல் ஆணையம் மறுக்கிறது என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். ஆனால், இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி நேற்று 8 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிவிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இன்றும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் அரிமா சுந்தரம் முறையீடு செய்துள்ளார். அப்போது, "அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனியாக நாங்கள் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில், அதாவது அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் எனது கையொப்பத்துடன் அனுப்பப்படும் வேட்பாளரின் பெயரை ஏற்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுக்கிறது. இந்த இரண்டும் மிக மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்க வேண்டியிருக்கிறது. ஆலோசனைகள் எல்லாம் ஒரு பக்கம் நடந்தாலும் எங்கள் சார்பாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம்" என்று கூறினார்.

இந்த முறையீடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ், மகேஷ்வரி அமர்வு முன் வைக்கப்பட்டது. அப்போது, இந்த தகவலை ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தெரிவித்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பியதோடு, நீங்கள் திங்கள்கிழமை வாருங்கள். அப்போது உங்களது முறையீட்டை செய்யுங்கள் என்று அனுமதி அளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in