'தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை' - உத்தவ் தாக்கரேவின் கடும் தாக்குதல்

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரேதேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை

ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனா கட்சியின் பெயரும், வில் அம்பு சின்னமும் ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீதான தாக்குதலை மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தீவிரப்படுத்தியுள்ளார்.

மும்பையில் இன்று தாக்கரேயின் குடும்ப இல்லமான மாடோஸ்ரீக்கு வெளிய கூடியிருந்த பெரும் கூட்டத்தினரிடையே உரையாற்றிய உத்தவ் தாக்கரே, "தேர்தல் கமிஷன் பிரதமர் நரேந்திர மோடியின் அடிமை, இதற்கு முன் நடக்காத ஒன்றைச் செய்துள்ளார். நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். அடுத்த தேர்தலுக்குத் தயாராக இருங்கள். கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது, திருடனுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு பெரிய அடியாக, தேர்தல் ஆணையம் நேற்று அவரது தந்தை 1966 ல் நிறுவிய கட்சியின் அடையாளத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் ஒப்படைத்தது. இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாக உத்தவ் தாக்கரே தரப்பு கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in