களைகட்டும் மக்களவை தேர்தல் பணி... தேர்தல் ஆணையம் சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை!

இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் சென்னையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

சத்யபிரதா சாஹூ
சத்யபிரதா சாஹூ

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர். 

இந்திய தேர்தல் ஆணையத்தின், துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

அதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத்துறை உள்ளிட்ட சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் மாலை 5.30 மணி வரை ஆலோசனை நடத்த உள்ளனர்.

பின்னர், நாளை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருகையை முன்னிட்டு தமிழ்நாட்டு காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தலை எதிர்கொள்ள முழுமையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in