சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னம் யாருக்கு? - தேர்தல் ஆணையம் விசாரணைக்கு அழைப்பு

சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னம் யாருக்கு? - தேர்தல் ஆணையம் விசாரணைக்கு அழைப்பு

உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பிரிவுகளை டிசம்பர் 12-ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரிக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிவசேனா கட்சி மற்றும் சின்னம் குறித்து உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுகளிடம் டிசம்பர் 12-ம் தேதி விசாணை நடத்த தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இது தொடர்பான ஆவணங்களை டிசம்பர் 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு இரு குழுக்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், நவம்பர் 23-ம் தேதிக்குள் சிவசேனா பிரிவினர் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கான கோரிக்கையை உறுதிப்படுத்த புதிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. தேர்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவும் தேர்தல் குழு கேட்டுக் கொண்டது.

அக்டோபரில் தேர்தல் ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், இரு பிரிவினரும் கட்சியின் பெயர் மற்றும் அதன் 'வில் -அம்பு' சின்னத்தை பயன்படுத்த தடை விதித்தது. அதன் பின்னர், உத்தவ் தாக்கரே பிரிவுக்கான கட்சிப் பெயராக 'சிவசேனா - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' என்றும், கட்சியின் ஏக்நாத் ஷிண்டே குழுவிற்கு 'பாலாசாஹேபஞ்சி சிவசேனா' என்றும் பெயர் ஒதுக்கப்பட்டது. இரு பிரிவுகளுக்கும் தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in