ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனாவின் பெயர், வில் அம்பு சின்னத்தை வழங்கியது தேர்தல் ஆணையம்

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டேஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனாவின் பெயர், வில் அம்பு சின்னத்தை வழங்கியது தேர்தல் ஆணையம்

சிவசேனா கட்சியின் பெயரும், அதன் வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மகாராஷ்ட்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 2022ல் உத்தவ் தாக்கரேவின் ஆட்சியைக் கலைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். அதன்பின்னர் உத்தவ் தாக்கரே மற்றும் ஏகாந்த் ஷிண்டே ஆதரவாளர்கள் இரு பிரிவாக செயல்படுகிறார்கள். அவர்கள் இருவரும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் மீது உரிமைக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகினர்.

அக்டோபர் 2022ல், தேர்தல் ஆணையம் ஒன்றுபட்ட சிவசேனாவின் வில் மற்றும் அம்பு சின்னத்தை முடக்கியது. இரு பிரிவுகளுக்கும் வெவ்வேறு பெயர்களையும், சின்னங்களையும் வழங்கியது. ஷிண்டே பிரிவினருக்கு பாலாசாஹேபஞ்சி சிவசேனா என பெயரும், இரண்டு வாள்கள் மற்றும் கேடயங்கள் கட்சி சின்னமாகவும் வழங்கப்பட்டது. உத்தவ் தாக்கரே பிரிவுக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரும், அதன் சின்னமாக ஜோதியும் வழங்கப்பட்டது.

சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தின் உரிமை குறித்த இறுதி விசாரணை ஜனவரி மாதம் நடந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு வெள்ளிக்கிழமை வந்தது. இந்த செய்தி ஷிண்டே முகாமுக்கு கொண்டாட்டமாக உள்ளது. ஆனால், உத்தவ் தாக்கரேவின் தந்தை மறைந்த பால் தாக்கரே சிவசேனா கட்சியை நிறுவியதால், உத்தவ் பிரிவினருக்கு இது பெரும் அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in