
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மிகவும் விறு, விறுப்பாக நடந்துவருகிறது. அதில் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் பீப் சத்தம் கேட்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்பட பல்வேறு பதவிகளுக்கான கவுன்சிலர் தேர்தல் காலை முதல் விறு, விறுப்புடன் நடந்து வருகிறது. இதில் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட 11 வது வார்டுக்கான வாக்குப்பதிவு, படந்தாலுமூடு பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் நடந்து வருகிறது. இங்கு திமுக, அதிமுக, பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளும் போட்டிக்களத்தில் இருக்கிறது. அனைத்துக் கட்சியின் முகவர்களும் வாக்குச்சாவடியில் பணியில் இருந்தனர்.
இந்நிலையில் இங்கு வாக்களித்த பின்பு, பீப் சத்தம் எழவில்லை. இதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடியில் இருந்த முகவர்கள் இதுகுறித்து கேட்டு தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவிவருகிறது.