மொழியை அரசியலாக்குபவர்கள் இனி தங்கள் கடைகளை மூட வேண்டும்... பிரதமர் மோடி ஆவேசம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடிமொழியை அரசியலாக்குபவர்கள் இனி தங்கள் கடைகளை மூட வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்!

புதிய தேசிய கல்விக் கொள்கை நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையையும், மதிப்பையும் அளிக்கும் என்றும், தங்கள் சுயநலத்திற்காக மொழியை அரசியலாக்க முயற்சிப்பவர்கள் தங்கள் கடைகளை இனி மூட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லி பிரகதி மைதானத்தில் புதிய கல்விக் கொள்கை தொடங்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு விழாவான 'அகில் பாரதிய சிக்ஷா சமாகம்' நிகழ்வில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, “மாணவர்களை அவர்களின் திறமைக்கு பதிலாக, அவர்களின் மொழியின் அடிப்படையில் மதிப்பிடுவதே அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. புதிய தேசிய கல்விக் கொள்கையானது நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையையும் பெருமையையும் அளிக்கும். தங்கள் சுயநலத்திற்காக மொழியை அரசியலாக்க முயல்பவர்கள் இனி தங்கள் கடைகளை மூட வேண்டும்" என்று கூறினார்.

மேலும், "தாய்மொழியில் கல்வி கற்பது இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு ஒரு புதிய நீதியை அறிமுகப்படுத்துகிறது. இது சமூக நீதிக்கான மிக முக்கியமான படியாகும். ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் தங்கள் தாய்மொழிகளைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும், அவை பின்தங்கிய நிலையில் இருப்பதாக காட்டப்படுகிறது.

ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களின் திறமை அங்கீகரிக்கப்படவில்லை. இதன் விளைவாக, கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு இப்போது புதிய கல்விக் கொள்கையால் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் கூட, நான் இந்திய மொழியில்தான் பேசுகிறேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in